Latestமலேசியா

பத்தே பத்து French Fries கீற்று பொரியல் 19 ரிங்கிட்டா? வாடிக்கையாளர் ஏமாற்றம், வியாபாரியை விளாசும் நெட்டிசன்கள்

கோலாலம்பூர், ஜூலை-31 – French Fries எனப்படும் உருளைக் கிழங்கு கீற்றுப் பொரியல் 19 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதாகக் கூறி X தளப் பயனர் ஒருவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தலைநகரில் உள்ள அங்காடி கடையொன்றிலிருந்து அந்த French Fries-சை அவர் வாங்கினார்.

அதில் 10 French Fries கீற்றுகள், கொஞ்சம் மிளகாய் சாந்து (Chilli Sauce), கொஞ்சம் மயோனிஸ் (Mayonis) கொஞ்சம் serunding ayam போடப்பட்டிருந்தன.

வெறும் பத்தே பத்து கீற்றுகளுக்கு 19 ரிங்கிட்டா என Amighul Deghaman எனும் அந்நபர் தனது X பதிவில் கொந்தளித்தார்.

இதில், இப்படியொரு மலிவான விலையில் வேறெங்கும் French Fries கிடைக்காது என சம்பந்தப்பட்ட வியாபாரி தம்பட்டம் அடித்துக் கொண்டது Amighul-லை மேலும் சினமூட்டியிருக்கிறது.

அவரின் ஆதங்கத்தைப் புரிந்துக் கொண்ட நெட்டிசன்கள், கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா எனக் கேட்டு கருத்துகளில் அந்த வியாபாரியை விளாசி வருகின்றனர்.

அவர்களில் ஒருவர், விலையை விடுங்கள், அதன் சுவைக் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கெல்லாம் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!