
பந்திங் – ஆகஸ்ட் 23 – பந்திங் ஜாலான் சுல்தான் சுலைமான் ஷாவில் இன்று அதிகாலை கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பந்திங் தீயணைப்பு துறையினர் சுமார் ஒன்பது நிமிடங்களிலேயே சம்பவ இடத்தை அடைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முகலிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
காரில் சிக்கியிருந்த ஆறு பேறில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் மேலும் மூவருக்கு தலை, உடல் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதென்று அறியப்படுகின்றது.