Latestமலேசியா

பந்திங்கில் வைரல் சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டல்ல; தவறான புரிந்துணர்வே என போலீஸ் விளக்கம்

குவாலா லாங்காட், ஆகஸ்ட்-13 – சிலாங்கூர், பந்திங்கில் மோட்டார் சைக்கிளொன்று இழுக்கப்பட்டு வைரலான சம்பவம் உண்மையில் திருட்டுச் சம்பவம் அல்ல.

மாறாக, வெறும் தவறான புரிந்துணர்வே அதற்குக் காரணமென போலீஸ் கூறியது.

முன்னதாக வைரலான 16 வினாடி வீடியோவில் மோட்டார் சைக்கிள் இழுப்பவர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்வதைக் காண முடிந்தது.

இதையடுத்து, வாங்கியக் கடனுக்கான மாத தவணைப் பணத்தைச் சரியாகச் செலுத்தாத மோட்டார் சைக்கிள்களை இழுத்துச் செல்பவராக வேலை செய்யும் 35 வயது பெண்ணிடமிருந்து போலீஸ் 2 புகார்களைப் பெற்றது.

அதே சமயம், அப்பெண்ணும் அவரின் சக ஊழியரும் இழுத்துச் சென்றிருக்க வேண்டிய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரது மகனான 16 வயது பையனிடமிருந்தும் புகார் பெறப்பட்டது.

இரு தரப்பின் வாக்குமூலங்களையும் பதிவுச் செய்த போலீசார், தவறான புரிந்துணர்வு நடந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மாத தவணைப் பணத்தை சுமார் ஓராண்டாகச் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அதன் காரணமாகத் தான், அதனை இழுத்துச் செல்ல அப்பெண்ணும் சக ஊழியரும் வந்துள்ளனர்.

இதையடுத்து இரு தரப்புமே பேசி நல்லபடியாக பிரச்னையைத் தீர்த்துக் கொண்டனர்.

ஆக, வைரலாகி நெட்சன்கள் பேசிக் கொண்டது போல் மோட்டார் சைக்கிள் திருட்டு எதுவும் நிகழவில்லை என குவாலா லங்காட் போலீஸ் தெளிவுப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!