Latestமலேசியா

பன்றி இறைச்சி & மதுபானம் பரிமாறாத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க Jakim பரிசீலனை

கோலாலம்பூர், செப்டம்பர் -6, பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் பரிமாறாத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான Jakim பரிசீலித்து வருகிறது.

சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நாயிம் மொக்தார் (Na’im Mokhtar) அவ்வாறு கூறியுள்ளார்.

உணவக நடத்துனர்களுக்கும், உணவு நிறுவனங்களுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாயப்படுத்தும் சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.

மாறாக, ஹலால் சான்றிதழைப் பெறுவது, அவர்களுக்கு தன்னார்வ அடிப்படையிலேயே இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

எனவே மேற்கண்ட உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.

அதன் அமுலாக்கத்தில் பல்வேறு அரசு நிறுவனங்களும் ஈடுபட வேண்டியிருக்கும் என்றார் அவர்.

பயனீட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம், ஹலால் சான்றிதழைப் பெற உணவகங்களை நடத்துவோருக்கு அழுத்தம் கொடுக்க முடியுமென நாயிம் சொன்னார்.

முஸ்லீம் வாடிக்கையாளர்களைக் கொண்ட 6 பிரபல உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்கவில்லை என, செவ்வாய்க்கிழமை Jakim உறுதிப்படுத்தியது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!