கோலாலம்பூர், மே 17 – தற்போது நாட்டைப் பாதித்துள்ள சில சம்பவங்கள் குறிப்பாக சில காற்பந்து விளையாட்டாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தம்மை தொடர்புபடுத்துவது குறித்து ஜோகூர் இடைக்கால சுல்தான் Tunku Mahkota Ismail நகைச்சுவையாக கிண்டல் செய்ததோடு இது குறித்து கடுமையாக சாடினார். Johor Darul Ta’zim காற்பந்து கிளப்பின் உரிமையாளருமான Tunku Mahkota Ismail இன்று தமது Instagram பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். சில சம்பவங்களில் தம்மை தொடர்புபடுத்துவதை அவர் கடுமையாக நிராகரித்தார். அனைத்து வகையான வன்முறைகளை போராடுவதற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
Akyar Rashid வழிப்பறி கொள்ளையின்போது தாக்கப்பட்டுள்ளார். Faisal Halim மீது asid தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Safiq Rahimமின் கார் காண்ணாடி உடைக்கப்பட்டது. Siti Nur Masyitahவை கார் மோதியுள்ளது. நேற்றிரவு பேரா Bagan Seraiயில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இன்று விடியற்காலையில் உலுத் திராம் போலீஸ் நிலையத்தில் முகமூடி அணிந்த ஆடவன் இரண்டு போலீஸ்காரர்களை தாக்கி கொன்றுள்ளான்.
இந்த சம்பவங்களுக்கும் காற்பந்து விளையாட்டிற்கும் தொடர்பில்லை. விளையாட்டரங்கத்திற்கு வெளியில் மற்றும் காற்பந்து விளையாட்டு பகுதிக்கு வெளியே இச்சம்பவங்கள் நடந்துள்ளது. காற்பந்து விளையாட்டாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என Tunku Mahkota Ismail இன்ஸ்டாகிரேமில் வலியுறுத்தினார்.