
மலாக்கா, ஜூலை 18 – கடந்த புதன்கிழமை, பராமரிப்பு இல்லத்தில் ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நர்சரி பராமரிப்பாளரை இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு குழந்தைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன் அந்த 26 வயதுடைய சந்தேக நபர் குழந்தையைப் புறக்கணித்ததாக குற்றம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
குழந்தை குப்புறப் படுத்திருக்கும்போது நீரில் மூழ்கி இறந்ததாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தன்று அக்குழந்தை துணியில் சுற்றப்பட்டு மெத்தையில் இருந்தது போலீஸ் தரப்பிற்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடலைப் பரிசோதித்ததில் குற்றச் செயல்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டப்போதும், போலீஸ் தரப்பினர் தங்களின் தீர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.