
கேரளா, ஜூலை 24 – கேரளா மாநிலத்தில், சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு ஒரு பழுத்த பலாப்பழம் தான் காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், இரத்தத்தில் ஆல்கஹால் அளவீட்டை கண்டறியும் சாதனத்தைக் கொண்டு ஓட்டுநர்களைப் பரிசோதித்தபோது, அவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக முதலில் கண்டறியப்பட்டது.
ஆனால் அம்மூவரும், தாங்கள் மது அருந்தவில்லை என்றும் பழுத்த பலாப்பழத்தைத்தான் சாப்பிட்டார்கள் என்றும் உறுதியாக கூறியதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பினருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தகவலை உறுதிப்படுத்துவதற்கு போலீசார், மது அருந்தாத ஓட்டுநர் ஒருவரை அழைத்து அதே பலாப்பழத்தின் சில துண்டுகளை சாப்பிடச் சொன்னார்கள்.
சிறிது நேரம் கழித்து, மீண்டும் பரிசோதனை செய்தபோது ரத்தத்தில் மதுபோதை இருப்பதைக் கண்ட போலீஸ் தரப்பு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.