இந்தியா, ஜூலை 26 – பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த தனது பேரனை வகுப்பறை வரை அழைத்து, விட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டப்பட்ட அந்த புகைப்படங்களில் பேரனுடன் காரில் இருப்பது போலவும், ரஜினிகாந்த தனது பேரனைக் கொண்டு வகுப்பறையில் விட்டுச் செல்வது போலவும் இருந்தது.
ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
‘நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் நீங்கள்தான் சிறப்பானவர். அது திரையாக இருந்தாலும் சரி, நிஜமாக இருந்தாலும் சரி, என் அன்பான அப்பா’ என்றும் அந்த புகைப்படங்களுக்குக் கீழ் செளந்தர்யா பதிவிட்டுள்ளார்.