பஸ் நிலையத்தில் கைப்பேசி பறிப்பு முயற்சியை தடுத்த இளைஞரின் சாகசம் வலைத்தளத்தில் வைரல்

கோலாலம்பூர், அக்டோபர் 16 –
பஸ் நிலையம் ஒன்றில் கைப்பேசியை பறிக்க முயன்ற ஆடவனின் செயலைத் தடுத்த இளைஞரின் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
பகிரப்பட்ட காணொளியில் பெண் ஒருவர் பேருந்து நிலையத்திற்கு முன் நின்று கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, எதிர் வழியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அவரை மெதுவாக நெருங்கி அவரின் கைப்பேசியைப் பறிக்க முயன்றான்.
அந்த சமயம் பார்த்து அருகில் இருந்த இளைஞர் ஒருவர் விரைவாகச் செயல்பட்டு அக்கைப்பேசியைப் பிடித்ததால், திருடனின் திட்டம் தோல்வியடைந்து தொடர்ந்து அவன் அவ்விடத்தை விட்டு தப்பி சென்று விட்டான்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலர் அந்த இளைஞரின் துணிவான செயலைப் பாராட்டி வரும் அதே வேளை சிலர் எதிர்மறையான கேள்விகளைத் தொடுத்துள்ளனனர்.
அதாவது வலைதளவாசிகளில் சிலர் இதனை காட்சியமைக்கப்பட்ட நாடகம் என்றும் கூட்டம் மிகுந்திருக்கும் பகுதியில் எவ்வாறு திருடன் திருட முயல்வான் என்றும் தொடர்ந்து கருத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது சிறப்பு என்று மேற்கண்ட கேள்விக்கு சமூக ஊடக பயனர்கள் பதிலளித்துள்ளனர்.