
கோலாலம்பூர், மே 29 – புதன்கிழமை நடைபெற்ற Aidiladha தியாகத் திருநாள்
விழாவின்போது பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பசுவைச் சுட்டதை பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்சா நியாயப்படுத்தியுள்ளார்.
அந்த பிராணி முரட்டுத்தனமாக செயல்பட்டதால் , பொதுப் பாதுகாப்பிற்காகவே அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட பசு கட்டுப்பாட்டை மீறி வெறித்தனமாகச் செயல்பட்ட பின்னரே சுட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக பெர்லிஸ் பெர்சத்து தலைவமான அபு பக்கார் குறிப்பிட்டார்.
மேலும், விழாவில் இருந்த மற்ற 24 பசுக்கள் வழக்கமான நடைமுறையின்படி korban செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வேடிக்கைக்காக அந்தப் பசுவைச் சுடவில்லை. அது ஆக்ரோஷமாக மாறியிருந்தது. ஒருவேளை நாங்கள் அதைத் தனியாக விட்டு, அது யாரையாவது தாக்கி கொன்றிருந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் அபு பாக்கார் வினவினார்.
அது தப்பி ஓடியதும், எங்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தாம் துப்பாக்கியை எடுத்து பசுவின் காலில் சுட்டதாகவும் , அது கீழே விழுந்த பிறகு, நாங்கள் அதை Korban செய்தோம் என அவர் தெரிவித்தார்.
பெர்லீஸ் மந்திரிபெசார் அபு பக்கர் துப்பாக்கியால் பசுவைச் சுடும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து , துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன் என இணையவாசிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே தனித்தனியாக, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கங்கார் போலீஸ் நிலையத் தலைவர் யுஷரிபுதீன் யூசோப் ( Yusharifuddin Yusup ) தெரிவித்தார்.



