Latestஉலகம்

பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருளா? கர்நாடகாவில் அதிரடி சோதனை

பெங்களூரு, ஜூலை-3 – தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் பானிபூரி நீரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆபத்தான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாலையோரங்களில் விற்கப்படும் மற்ற street food உணவுகளிலும் இது போன்ற ஆபத்தான பொருள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பானிபூரியின் பக்கமாய் கவனத்தைத் திருப்பிய போது அது அம்பலமானது.

பானிபூரியில், பானி நீர் பச்சையாக இருக்க வேண்டி பரவலாக ஒருவித கலரூட்டி பயன்படுத்தப்படுகிறது.

அதுவே புற்றுநோய்க்கு இட்டுச் செல்லக் கூடிய பொருள் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகா முழுவதும் சாலைத் தள்ளுவண்டி கடைகள், கல்யாண மண்டபங்கள், பேரங்காடிகள், கல்லூரிகள், கேளிக்கைப் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பானிபூரி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆபத்தான பொருள் இருப்பது உறுதியானால், நடவடிக்கை நிச்சயம் என கர்நாடக சுகாதார அமைச்சர் எச்சரித்தார்.

இவ்வேளையில் தமிழகத்திலும் அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாய், கோபி மன்ச்சூரியன், கெபாப் போன்ற உணகளில் செயற்கை கலரூட்டி பயன்பாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், இப்போது பானிபூரியின் பச்சை நிறத்திற்கும் ‘ஆபத்து’ வந்துள்ளது.

இது பானிபூரி பிரியர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!