
பாயான் லெப்பாஸ், ஜூலை-1 – பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் புக்கிட் காம்பிரில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில், பெண்ணும் குழந்தையும் நேற்றிரவு இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர்.
வீட்டினுள்ளிருந்து ஒருவித துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடம் விரைந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு மீட்புப் படை, கதவை உடைத்து பார்த்த போது, வரவேற்பறையில் அழுகிய நிலையில் உடல்கள் கிடந்தன.
அடையாள ஆவணங்களைப் பரிசோதித்ததில், இறந்தவர்கள் முறையே 40 வயது தாயும் 2 வயது மகளும் என உறுதிப்படுத்தப்பட்டதாக, தீமோர் லாவோட் போலீஸ் கூறியது.
சவப்பரிசோதனை அறிக்கைக் கிடைக்கப் பெறும் வரை, அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.