பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வாகைசூடும் திடல் தட வெற்றியாளருக்கு 50,000 டாலர் ரொக்கப் பரிசு
பாரிஸ் , ஏப் 11 – இவ்வாண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் திடல் தட பிரிவில் தங்கப் பதக்கத்தை வகைசூடும் போட்டியாளர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும் என உலக ஓட்டப்பந்தய சம்மேளனம் அறிவித்துள்ளது. Los Angeles நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதங்கங்களை வாகைசூடும் திடல் தட போட்டியாளர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என அனைத்துலக ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தலைவர் Sebastian Coe தெரிவித்திருக்கிறார். எந்தவொரு ஒலிம்பிக் போட்டியின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றும் ஓட்டப்பந்தய போட்டியாளர்களின் வெற்றியையும் அவர்களது பங்கேற்பையும் அங்கீகரிக்கும் வகையில் 50,000 டாலர் பரிசுத் தொகை அமையும் என அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் பகிர்ந்தளிக்கப்படும் 2.4 மில்லியன் டாலர் மூலமாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுக்கான திடல் தட பிரிவுகளுக்கான 48 போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுவோர் 50,000 டாலர் தொகையை பரிசாகப் பெறுவார்கள். ஒலிம்பிக் போட்டியில் அஞ்சல் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெறும் குழுவின் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 50,000 டாலர் பரிசுத் தொகை கிர்ந்தளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.