
பாலிங், நவம்பர்-10,
கெடா, பாலிங்கில் உள்ள கம்போங் Lubuk Kabuவில் திருமணமாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன ஆடவர் நேற்று ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
காலை 11.30 மணிக்கு பொது மக்களில் ஒருவர் புகாரளித்ததை அடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
அங்கு 34 வயது நபர் ஒரு வீட்டிற்கு அருகில் கிட்டத்தட்ட 5 மீட்டர் உயரமுள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
உடன் வந்திருந்த Kupang சுகாதார மருத்துவமனையின் அதிகாரிகள் அந்நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
சடலம் சவப்பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் Sultanah Bahiyah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புது மாப்பிள்ளை இரண்டாவது நாளிலேயே தூக்கில் தொங்கியது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்திற்கான உண்மைக் காரணத்தைத் கண்டறிய பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



