Latestமலேசியா

பாலியல் வல்லுறவு செய்ததோடு ஆபாசப் பொருட்கள் வைத்திருந்ததாக கல்லூரி மாணவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஆகஸ்ட்.11-கடந்த மே மாதம் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் மீது இன்று சிரம்பான் sessions நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 18 வயதான அந்நபர் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டன.

மே 24 ஆம் தேதி அதிகாலை சுமார் 1.00 மணியளவில், Rembau, Kotaவில் Kampung Batu Putih பகுதியில் உள்ள புதர்கள் நிறைந்த சாலையோரத்தில், 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததைக் காட்டும் காணொளிப் பதிவை தமது கைப்பேசியில் வைத்திருந்ததாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம்.

மே 27 ஆம் தேதி அதிகாலையில் Rembau, Pedas அருகே சாலையோரப் புதர்ப் பகுதியில் அதே சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அக்குற்றத்திற்காக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10,000 பிணைத் தொகையும், கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் வருமான இல்லாத அம்மாணவர் மீதான இரு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு நபர் உத்தவாதத்துடன் கூடிய தலா 5,000 ரிங்கிட் பிணைத் தொகை விதிக்கப்பட்டது. அதோடு கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

அவ்வழக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!