Latestமலேசியா

பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது

பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது

புக்கிட் ஜாலில், பிப்ரவரி-24

கோலாலாம்பூர், பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR அடுக்குமாடி குடியிருப்பில் ஆயுதமேந்திய கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில், போலீஸார் 5 சந்தேக நபர்களைக் கைதுச் செய்துள்ளனர்.

சனிக்கிழமையன்று கத்தி மற்றும் baseball மட்டை ஏந்திய கும்பலால் தாம் தாக்கப்பட்டதாகக் கூறி 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் முன்னதாக போலீஸில் புகாரளித்தார்.

இதையடுத்து 18 முதல் 40 வயது வரையிலான அந்த ஐவரும் அதே நாளன்று கைதானதாக, செராஸ் போலீஸ் தலைவர் Rosdi Daud கூறினார்.

விசாரணையில், அவர்களில் மூவருக்கு கிரிமினல் குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

எனினும், ஐவரில் எவரும் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.

சந்தேக நபர்களில் ஒருவருக்கும் புகார்தாரரின் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே கலவரத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது.

விசாரணைக்காக ஐவரும் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!