Latestமலேசியா

பினாங்கின் 2ஆவது பாலத்தில் எஸ்.யு.வி வாகனம் கவிழ்ந்ததில் பாதுகாவலர் அதிகாரி மரணம்

பாயன் லெப்பாஸ் , ஆக 5 – இன்று காலையில் பினாங்கு இரண்டாவது பாலத்தின் 18.2 ஆவது கிலோமீட்டரில் SUV வாகனம் கவிழ்ந்து சாலை தடுப்பில் மோதிய விபத்தில் அந்த வாகனத்தை ஓட்டிய பாதுகாவலர் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார்.

விடியற்காலை மணி 5.50 அளவில் Sultan Abdul Halim Muadzam Shah பாலத்தில் நிகழ்ந்த அந்த விபத்தில் ( SUV ) Proton X50 வாகனத்தை ஓட்டிய 29 வயதுடைய குணா (Guna) கடுமையாக காயம் அடைந்ததால் இறந்தார் என Barat Daya மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Kamarul Rizal Jenal தெரிவித்தார்.

அவர் தனியாக Batu Kawan னிலிருந்து Batu Maungகிற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, சாலையில் சுற்றியபின் மோட்டார்சைக்கிள்கள் செல்லும் சாலையின் தடுப்பின் மேல் மோதியது. அந்த வாகனத்தின் இருக்கைப் பகுதியில் சிக்கிக் கொண்ட அவரது உடல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களின் உதவியோடு சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி மீட்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் மரணம் அடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த விபத்தில் குணாவுக்கு லைசெஸ் இருந்தபோதிலும் அவரது வாகனத்தின் சாலை வரி கடந்த மார்ச் மாதமே காலவாதியாகிவிட்டதாகவும் கமருல் ரிஷால் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!