Latestமலேசியா

பினாங்கில் அடுக்குமாடி குடியிருப்பின் 24-வது மாடியிலிருந்து 5 வயது சிறுவன் கீழே விழுந்து மரணம்

பாயன் லெப்பாஸ், ஜூன 26 – பினாங்கு தெலுக் கும்பாரில் (Teluk Kumbar)
உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 24-வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்ததாகக் கருதப்படும் ஐந்து வயது சிறுவன் ஒருவன், நேற்று இரவு மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.

இரவு சுமார் 11.30 மணியளவில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் பொதுமக்களால் அச்சிறுவன் கண்டெடுக்கப்பட்ட போதிலும் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் அவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

சம்பவ இடத்தில் காவல்துறை மற்றும் தடயவியல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், குற்றச் செயலுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

அந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே இச்சம்பவம் குறித்துத் தங்கள் துறை ஒரு ஊடக அறிக்கையை வெளியிடும் என்று பினாங்கு , தென் மேற்கு மாவட்டக் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அனுவால் அப்துல் வஹாப் (Anuwal Ab Wahab) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!