Latestமலேசியா

பினாங்கில் அடை மழை ; பத்து இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, உயிருடற் சேதம் எதுவும் பதிவாகவில்லை

ஜோர்ஜ் டவுன், மே 7 – பலத்த காற்றுடன் கூடிய அடை மழையால், பினாங்கு தீவின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

நேற்றிரவு மணி 11 முதல் பின்னிரவு மணி ஒன்று வரை, MBPP எனப்படும் பினாங்கு தீவின் நகராண்மைக் கழகத்தின் “hotline” எண்ணுக்கு, குறைந்தது 10 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள் குறித்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, Pintasan Cecil,,Taman Bukit Gelugor, Jalan Bell,, ⁠ இந்தோனேசிய தூதரகதம் அமைந்துள்ள ஜாலான் பர்மா,Park Road, Jalan Biggs,⁠ Jalan Cantonment, Jalan Sultan Ahmad Shahவில் EPF கோபுரம், Jalan Macalister மற்றும் Jalan Sungai Duaலுள்ள, Hamna அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

எனினும், அச்சம்பவங்களில் உயிருடற் சேதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

அவற்றில் சில மரங்கள் சாலைகளில் விழுந்த வேளை ; சில மின் கம்பங்கள் மீது விழுந்து சேதமடையச் செய்துள்ளன. அதனால், சில இடங்களில் மின் விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது.

பினாங்கு நகராண்மைக் கழகத்தின் துரித நடவடிக்கையின் வாயிலாக, சம்பந்தப்பட்ட மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், ஹம்னா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், பணியாளர்களின் பாதுகாப்பு கருதி, விழுந்த மரத்தை அகற்ற சிறப்பு இயந்திரத்திற்காக காத்திருப்பதால், அங்கு துப்புரவு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, பினாங்கு நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவு வாயிலாக கூறியுள்ளது.

பினாங்கில், வேரோடு மரங்கள் சாய்ந்த சம்பவங்கள், நிலச்சரிவுகள் மற்றும் பிற புகார்கள் குறித்து, மாநில நகராண்மைக் கழகத்தின், 04-263 7000 அல்லது 04-263 7637 அல்லது 016-2004082 என்ற WhatsApp எண்ணை தொடர்புக் கோண்டு தெரிவிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!