ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-28, பினாங்கில் செப்டம்பர் 18-ஆம் தேதி கனமழையின் போது மரமும் காங்கிரீட் சுவரும் விழுந்ததில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்துக்கு, தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் சார்பாக 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சீன சுற்றுப் பயணிகளான தந்தைக்கும் மகளுக்கும் தலா 5,000 ரிங்கிட் என்ற வகையில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்துக்கு அத்தொகை வழங்கப்பட்டது.
தன்னால் ஆன இந்த சிறியத் தொகையானது, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சற்று மன ஆறுதலாக இருக்கட்டுமென, தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Hui Ying தெரிவித்தார்.
துணை நிதியமைச்சருமான Hui Yui தற்சமம் வெளிநாட்டில் இருப்பதால், அவர் சார்பில் அதிகாரிகள் கருணைத் தொகையை ஒப்படைத்தனர்.
Lebuh Gereja-வில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் முறையே 50 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.