Latestமலேசியா

பினாங்கில் சீனக் கோயில்களுக்கு விற்பதற்காக 100 ஆமைகள் வைத்திருந்த வங்காளதேச நபர் கைது

புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி-7,

பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், பாகான் லாலாங்கில், 45 வயது வங்காளதேச ஆடவர் ஒருவர் 100 ஆமைகளை வைத்திருந்ததற்காக பிடிபட்டுள்ளார்.

Labi-labi எனப்படும் பரிசல் ஆமைகளும் அவற்றிலடங்கும்.

உளவுத் தகவல்கள் அடிப்படையில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN மற்றும் போலீஸார் இணைந்து அவ்வாடவரின் வீட்டில் நடத்திய சோதனையில் அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.

இந்த உயிரினங்களின் மொத்த மதிப்பு RM20,000 என கணக்கிடப்படுகிறது.

ஒவ்வோர் ஆமையும் RM20 முதல் RM200 வரை விலையில் சீனக் கோவில்களில் மத சடங்குகளுக்காக விற்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்த ஆமைகள், சுற்று வட்டார ஆறுகளில் பிடிக்கப்பட்டவை மற்றும் கடைகளில் வாங்கி சேர்த்து வைக்கப்பட்டவை என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவ்வாடவர் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, 2010 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட உள்ளூர் ஆமையினங்கள் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இயற்கை வாழ்விடத்தில் விடப்படும்.

வெளிநாட்டு இனங்கள் வனவிலங்கு மீட்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!