
கோலாலம்பூர், டிசம்பர்-31, புக்கிட் பிந்தாங்கில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வாகன நிறுத்துமிட கட்டண வசூலிப்பு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை ஞாயிற்றுக்கிழமை மதியம் மேற்கொண்ட சோதனையில் 17 வெளிநாட்டு ஆடவர்கள் கைதாகினர்.
அவர்களில் 15 பேர் மியன்மார் நாட்டவர்கள், இருவர் வங்காளதேசிகள்.
புக்கிட் பிந்தாங்கில் இரு இடங்களில் அக்கும்பல் சட்டவிரோதமாக வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை வசூலித்து வந்துள்ளது.
Facebook-கில் வைரலான ஒரு வீடியோவை தொடர்ந்து அச்சோதனையில் இறங்கியதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார்.
இது போன்று, சட்டவிரோதமாக வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை வசூலிப்போர் குறித்து தகவல் கொடுத்து பொதுமக்களும் உதவ வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.