Latestமலேசியா

பினாங்கில் தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கூழ்; RM355,874 பெறுமானமுள்ள சரக்குகள் பறிமுதல்

பட்டவர்த், செப்டம்பர் 30 – தைவானிலிருந்து முறையான Maqis இறக்குமதி அனுமதி இல்லாத ஐஸ்கிரீம் சரக்குகளை, பினாங்கு மலேசியத் தனிமைப்படுத்தல் சேவை மற்றும் சோதனை அமலாக்கத் துறையான Maqis பறிமுதல் செய்துள்ளது.

பினாங்கு Maqis துறை நடத்திய சோதனையில், அந்த 355,874 ரிங்கிட் மதிப்புள்ள ஐஸ்கிரீம் ஏற்றி வந்த வணிகக் கொள்கலனை அது, மடக்கிப் பிடித்துள்ளது.

அதில் 3,772 கிலோ கிராம் எடையுள்ள ஐஸ்கிரீம்களுக்கு முறையான Maqis இறக்குமதி அனுமதி சான்றிதழ் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், அந்த மொத்த ஐஸ்கிரீம் சரக்குகளையும் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.

வணிகப் பொருட்களுக்குச் செல்லுபடியாகும் Maqis இறக்குமதி அனுமதி இல்லாமல், விலங்கு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வது, Maqis சட்டத்தின் பிரிவு 11-யின் கீழ் குற்றமாகும்.

நாட்டின் உணவுத் துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்ட விதிகளை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது Maqis.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!