
ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 11 – ஜாலான் பாயா தெருபோங் சூரியா விஸ்டா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் அருகேயுள்ள மலை வளைவில், 30 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொழிற்சாலை பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 6 பேர் சிறிய காயங்களுக்கு ஆளாகி உள்ளனர் என்றும் ஓட்டுநர் உட்பட 24 பயணிகளும் எந்தக் காயமும் இன்றி தப்பியுள்ளார் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தகவல் அறிந்த 10 நிமிடத்திற்குள் பாயா தெருபோங் நிலையத்திலிருந்து மீட்பு குழு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று உதவி செயல்பாட்டு இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
வளைவுச் சாலையில் பேருந்து கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்து நடந்த இடத்தைப் பாதுகாக்கவும், பேருந்தின் நிலையை மதிப்பிடவும், மேற்பார்வையாளர் தலைமையில் எட்டு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.