கோலாலம்பூர், ஆக 9 – பினாங்கில் பட்டர்வெர்த் புறவட்ட சாலையில் போக்குவரத்து விதியை மீறி பெரிய அளவில் மோட்டார் சைக்கிளோட்டிகள் அணிகளாக சென்ற 37 வினாடிகளைக் கொண்ட காணொளி வைரலானதை தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் மோட்டார்சைக்கிளோட்டிய நபர் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
ஆகஸ்ட்டு 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற்ற அந்த நிகழ்வில் போலீசாரின் சாலை தடுப்பு சோதனையை திட்டமிட்டே மீறி அலட்சியமாக செல்லமுயன்றபோது அந்த நபர் கைது செய்யப்பட்டாதாக வட செபெராங் பிறை போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் ( Anuar Abdul Rahman ) தெரிவித்தார்.
மேலும் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதன் தொடர்பில் 25 மோட்டார்சைக்கிள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் பட்டர்வெர்த் புறவட்ட சாலையில் தவறான வழிதடத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றதாகவும் அவர் கூறினார்.