Latestமலேசியா

பினாங்கில் போலீசுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு; 2 சந்தேக நபர்கள் பலி

பட்டவொர்த், ஜூன்-26, பினாங்கு, சுங்கை லோக்கான், பெர்மாத்தாங் பாருவில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை இன்று அதிகாலை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

அதிகாலை 2 மணிக்கு Jalan Permatang Baru-வை நோக்கிச் செல்லும் சாலையின் Jalan Pokok Sena சந்திப்பில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த Myvi காரை முன்னதாக போலீஸ் பின்தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் அவர்களை நெருங்கிய போலீஸ், காரை நிறுத்தச் சொன்ன போது அவர்கள் கேட்கவில்லை.

மாறாக வேகமாகக் காரைச் செலுத்தியதோடு, போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் தற்காப்புக்காக போலீசாரும் பதிலுக்குச் சுட்டதில் காரிலிருந்த இரு சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

பினாங்கு போலீஸ் தலைவர் ஹம்சா அஹ்மாட் (Hamzah Ahmad) அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

அச்சம்பவம் குற்றவியல் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!