புக்கிட் மெர்தாஜாம், ஏப் 2 – பினாங்கு சட்டமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியைத் சேர்ந்த Nor Zamri Latiff வயிற்று வலி தொற்றின் காரணமாக Seberang Jaya மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மயக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளார். இதனை பினாங்கு பாஸ் செயலாளரான Iszuree Ibrahim உறுதிப்படுத்தியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக Sungai Bakap மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் அன்றறைய தினமே Seberang Jaya மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். Nor Zamri யை காண்பதற்கு வெளியார் எவரும் அனுமதிக்கப்படவில்லையென அவரது மனைவி தெரிவித்துள்ளார் என Iszuree Ibrahim கூறினார். கடந்த பொதுத் தேர்தலில் Perikatan Nasional லின் வேட்பாளராக போட்டியிட்ட Nor Zamri மொத்தம் 15,463 வாக்குகளைப் பெற்று 1,563 வாக்குகள் பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Nurhidaya che Ros சை வென்றார்.
Related Articles
டிக் டோக்கால் தலைமுறை கெட்டு சீரழியும் முன்னர் கடும் நடவடிக்கைத் தேவை – டத்தோ சிவராஜ் வலியுறுத்து
11 hours ago
நிர்வாணப் படங்களை அனுப்பியப் பேராசிரியர்; உயர் கல்வி அமைச்சு மௌனம் காப்பதாக மாணவர் அமைப்பு சாடல்
11 hours ago
Check Also
Close