Latestமலேசியா

பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்ஜிட் சிங் மாமானார் முறையீடு வாரிய தலைவராக நியமித்தது குறித்து எம்.ஏ.சி.சி விசாரணை நடத்த வேண்டும் – டாக்டர் ராமசமி வலியுறுத்து

பினாங்கு, ஜூன் 2 – அண்மையில் பினாங்கின் இரண்டாவது முதலமைச்சர்
Jagdeep Singh Deo வின் மாமானர் Appeals Board எனப்படும் முறையீடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து MACC விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய உரிமை கட்சியின் தலைவரான பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். வேண்டியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் சொந்த நலன் அல்லது அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமது மாமனார் Baldev Singh Gurchan Singh உட்பட அறுவரை முறையீடு வாரியத்தின் இயக்குனர்களாக நியமிக்கும் தீர்மானத்தை வியாழக்கிழமையன்று பினாங்கு சட்டமன்றம் நிறைவேற்றியதாகவும் Jagdeep முன்மொழிந்த அந்த தீர்மானம் பினாங்கு சட்டமன்ற கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றியதாக ராமசாமி சுட்டிக்காட்டினார்.

அந்த வாரியத்தில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் Abdul Fareed Abdul Gafoor துணைத் தலைவராகவும் Harinder Singh Malkit Singh , Carolyn Oh, Nagarathinam Rengasamy Pillai மற்றும் Regina Amalorpava Mary Aboorvasamy ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நன்கு அறிமுகமான கர்ப்பால் சிங்கின் புதல்வரான Jagdeep Singh தனது மாமானரை முறையீட்டு வாரியத்திற்கு முன்மொழிந்திருப்பது துரதிஷ்டவசமான ஒன்று என ராமசாமி தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் மூன்று தவணைக் காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு தவணை ஆட்சிக் குழு உறுப்பினராகவும் தற்போது இரண்டாவது துணை முதலமைச்சராகவும் இருந்துவரும் Jagdeep சிங் தனது உறவினரை நியமிக்கும் நடைமுறையை பின்பற்றக்கூடாது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். Baldev Singh கிற்கு அனுபவம் மற்றும் தகுதி இருக்கலாம். ஆனால் துணை முதலமைச்சரின் குடும்ப உறுப்பினரை முறையீடு வாரியத்திற்கு நியமிப்பது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சுயநலம் இல்லையா என ரமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் வினவியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!