ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-13 – செபராங் பிறை அருகே பினாங்கு பாலத்தில் பெரோடுவா அல்சா MPV வாகனம் அவசரப் பாதைக்குள் புகுந்ததில், மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.35 மணியளவில் அப்பாலத்தின் 7.4-வது கிலோ மீட்டரில் அவ்விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது 22 வயது பெரோடுவா அல்சா காரோட்டி கோலாலம்பூர் நோக்கியும், இறந்து போன மோட்டார் சைக்கிளோட்டி பட்டவொர்த்துக்கும் போய்க் கொண்டிருந்தனர்.
இருவருமே இடப்பக்கச் சாலையில் போய்க் கொண்டிருந்த போது, அந்த அல்சா MPV திடீரென அவசரப் பாதைக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளை மோதியது.
அதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த 38 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கோர விபத்து பின்னால் வந்த காரின் dashboard கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது.