Latestமலேசியா

பினாங்கு லெபூ ஆர்மேனியனில் கட்டிட இடிபாடு: இலங்கை தம்பதி காயம்

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 4 – பினாங்கு, லெபூ ஆர்மேனியனில் (Lebuh Armenian) கடை கட்டிடத்தின் மரக்கட்டை மற்றும் கற்கள் இடிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த கணவன், மனைவி காயமடைந்துள்ளனர்.

குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, கட்டிடத்தின் முதல் மாடிப் பகுதியிலிருந்த நடைபாதை அமைப்பு திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

40 மற்றும் 50 வயதுடைய இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் பினாங்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

மதியம் 1.11 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!