கோலாலம்பூர், ஜூலை-13 – பிரிக்ஃபீல்ட்சில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து 40 கள்ளக்குடியேறிகள் கைதாகியுள்ளனர்.
கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இன்று அதிகாலை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் கைதானதாக அதன் இயக்குநர் வான் மொஹமட் சவுப்பி வான் யூசோஃப் (Wan Mohammed Saupee Wan Yusoff) கூறினார்.
அவர்களில் 25 பேர் இந்தியப் பிரஜைகள், 10 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள், இருவர் பாகிஸ்தானியர்கள், இருவர் வங்காளதேசிகள், ஒருவர் மியான்மார் நாட்டவர் ஆவர்.
3 வயது முதல் 61 வயதிலான அவர்கள் முறையான பயணப் பத்திரம் கொண்டிருக்காதது, காலாவதியான பெர்மிட்டைக் கொண்டிருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கைதாகினர்.
குடிநுழைவுத் துறை சோதனையிட்ட ஒவ்வொரு வீட்டிலும், இரண்டாயிரம் ரிங்கிட் மாத வாடகையில் தலா 8 பேர் வரை குடியிருந்தது கண்டறியப்பட்டது.
கைதான கள்ளக்குடியேறிகள் பெரும்பாலும் கட்டுமானத் திட்டங்களிலும் உணவகங்களிலும் வேலை செய்து வந்துள்ளனர்.
மேல் விசாரணைக்காக, அவர்கள் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.