Latestமலேசியா

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஆனார் டத்தோ எம்.குமார்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- ஜோகூர் முன்னாள் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதன் வழி, டத்தோ ஸ்ரீ அமார் சிங்கிற்குப் பிறகு, தேசியப் போலீஸ் படையின் உச்சப் பதவிகளில் ஒன்றை வகிக்கும் வாய்ப்பைப் பெற்ற இந்தியராக டத்தோ குமார் விளங்குகிறார்.

இதற்கு முன் அமார் சிங், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராக இருந்தார்.

ஜூலை 1 முதல் APKS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக பணியிடம் மாறிச் சென்றுள்ள Datuk Seri Mohd Shuhaily Mohd Zain-னுக்கு பதிலாக குமார் பொறுப்பேற்றுள்ளார்.

தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ Mohd Khalid Ismail முன்னிலையில் நேற்று நடைபெற்ற பதவி ஒப்படைப்புச் சடங்கில், இடைக்கால CID தலைவர் Datuk Fadil Marsus-சிடமிருந்து குமார் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

குமாரின் அனுபவத்திற்கும் நற்சேவைக்கும் சரியான நேரத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் இதுவென, IGP தமதுரையில் பாராட்டினார்.

புக்கிட் அமானிலும் அவர் திறம்பட பணியாற்றுவார் என IGP நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜனவரியில் ஜோகூர் போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்ற டத்தோ குமார், இந்த ஒன்றரை ஆண்டுகளில் அம்மாநிலத்தில் குற்றச்செயல் துடைத்தொழிப்பில் தீவிரம் காட்டி, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டினார்.

போலீஸ் படை மட்டுமின்றி எல்லா இன மக்கள் மத்தியிலும் நன்மதிப்புடன் வலம் வருபவர், போலீஸ் படையின் அதிமுக்கியப் பதவிகளில் ஒன்றில் அமர்ந்து நமக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!