
பெட்டாலிங் ஜெயா ஆகஸ்ட் 12 – கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர், இன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
அந்த ஆடவன் ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று பிரிவு 52 இல் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 47 வயதுடைய இந்தோனேசிய நபரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் சவுக்கடி ஆகியவை விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக ஆபத்தான மருந்துகள் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் 5,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் அறியப்படுகின்றது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் சுற்றுலா விசா இன்னும் செல்லுபடியாகும் நிலையில் இருந்தாலும் அடுத்த மாதம் அது காலாவதியாகவுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம், அந்நபருக்கு 6,000 ரிங்கிட் ஜாமீன் தொகை விதித்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க உத்தரவிட்டது.
இவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரவழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.