பிரேசில், மே-8 – பிரேசில் நாட்டின் Pantanal ஈரநிலத்தில் ஆடவர் ஒருவர் ஏதோ தனது உற்ற நண்பரைப் போல் Anaconda பாம்புடன் சர்வ சாதாரணமாக நீந்திச் செல்வது இணையவாசிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராட்சத Anaconda பாம்புடன் எப்படி அவரால் நிதானமாக நீந்திச் செல்ல முடிகிறது என ஆளாளுக்குக் கேள்வி கேட்கின்றனர்.
உண்மையில் அவர் பயிற்சிப் பெற்ற ஒரு வனவிலங்கு பராமரிப்பாளர் ஆவார்.
போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தயார் நிலையோடு தான் Anaconda-வுடன் அவர் நீந்தியுள்ளார்.
அதோடு அந்த Anaconda பாம்புகளும் நன்றாகப் பயிற்சி பெற்றவை என்பது சிறப்பம்சமாகும்.
எனவே, வீடியோவைப் பார்ப்பவர்கள் ஆர்வத்தில் Anaconda-வைத் தேடி போய் விடாதீர்கள் என்ற எச்சரிக்கையுடன் அவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Pantanal, உலகின் மிகப் பெரிய வெப்ப மண்டல ஈரநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அது ராட்சத Anaconda பாம்புகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது.