Latestமலேசியா

பி.எஸ்.எம் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சிவராஜ் விலகுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 26 – பி.எஸ்.எம் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சிவராஜ் ஆறுமுகம் விலகவிருக்கிறார். கடந்த 9 ஆண்டு காலமாக அவர் தலைமைச் செயலாளராக இருந்தார். 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுக்கான தலைமைச் செயலாளர் பதவிக்கு புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பி.எஸ்.எம் தலைவர் அருட்செல்வன் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான கட்சித் தேர்தலில் 15 மத்திய செயற்குழு உறுப்பினர்களும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு ஐவரும், இரு கணக்காய்வாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அவர் கூறினார். ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களை நியமிக்காமல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை பின்பற்றும் அரசியல் கட்சிகளில் ஒன்றாக பி.எஸ்.எம் விளங்கிவருகிறது.

தலைமைச் செயலாளர், கணக்காய்வாளர் ஆகியோரும் கட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். பி.எஸ்.எம் தலைவர் டாக்டர் Michael Jeyakumar , கௌரவ பொருளார் கோ சோக் ஹவா (Soh Sook Hwa) மற்றும் தாமும் பதவியை தற்காத்துக் கொள்வதற்காக போட்டியிடுகிறோம் என அருட்செல்வன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!