Latestமலேசியா

புக்கிட் பிந்தாங் KTV-யில் போதைப்பொருள் நடவடிக்கை — குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை

கோலாலம்பூர், மே-15-கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு KTV கராவோக்கே பொழுதுபோக்கு மையத்தில், போதைப்பொருள் நடவடிக்கை மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் குடிநுழைவுத் துறை திடீர் சோதனை நடத்தியது.

இந்தச் சிறப்பு சோதனையில், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்ததாகவும், பொழுதுபோக்கில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களால் ஏராளமானோர் சீனப் பிரஜைகள் ஆவர்.

சட்டவிரோத பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சோதனையின் போது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், சிலர் மேல் விசாரணைக்காக குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தலைநகரில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் குற்றச்செயல்கள் மற்றும் குடிநுழைவு சட்ட மீறல்களை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தற்போது குடிநுழைவுச் சட்டம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களின் கீழ் விசாரணையில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!