
ஜோகூர் பாரு, மே-15-ஜொகூர் பாருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 33 வயது மதிக்கத்தக்க தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு 11 மணியளவில் போலீஸாருக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த அதிகாரிகள், அந்நபர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டறிந்தனர்.
மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவரின் உடலுக்கு அருகில் கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது கொலையாளியால் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் போலீஸாருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



