Latestமலேசியா

புடி மடானி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அரசாங்கம் உதவுகிறது

பாங்கி, ஜூன் 12 – BUDI MADANI முன்முயற்சியின் கீழ், தகுதிவாய்ந்த தனிநபர்கள், சிறு விவசாயிகள் மற்றும் சிறு அளவில் மூலப் பொருட்களை பயிரிடுவோர் ஒரு மாதத்திற்கு 200 ரிங்கிட் ரொக்க மானிய உதவிக்கு விண்ணப்பிக்க அரசாங்கம் தொடர்ந்து உதவி வரும். தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ள உள்நாட்டு வருமான வாரிய அலுவலகங்களில் BUDI MADANI பதிவு முகப்பிட சேவையை ஏற்பாடு செய்திருப்பதும் இந்த முயற்சியில் அடங்கும்.

Budi Madani னி என்பது தனி நபருக்கான உதவிகள், குடியானவர்கள் மற்றும் சிறு அளவில் மூலப்பொருள் பயிரிடுவோர், பொது வாகனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து சேவையை நடத்துவோருக்கு டீசல் உதவி தொகை கிடைப்பதற்கான அரசாங்கத்தின் ஏற்பாட்டு முயற்சிகளில் ஒன்றாகும். (BUDI MySubsidi Diesel) என பிரிக்கப்பட்ட தகுதியான குழுக்களுக்கு மானிய ஒதுக்கீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியாக இது அமைகிறது. உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் முகப்பிட சேவையில் எளிதாக இதற்கு பதிவு செய்துகொள்ள முடியும் என்பதோடு இதற்கு 10 அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக Budi Madani உதவியை பெற்றுவருபவரான சம்சுல் நயோப் (Ssamsul Nayop ) தெரிவித்தார். இணைய விண்ணப்பங்களைவிட நேருக்கு நேர் பதிவு செய்யும் இந்த நடைமுறை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!