
புது டெல்லியில் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில், 35 வயது ஆடவர் ஒருவர் தனது இரண்டு வயது மகளை அணைத்தவாறு 23வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அந்த நபர், தனது மகளை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, வேறு கட்டிடத்தின் 23ஆம் மாடிக்கு ஏறி குதித்ததாக கூறப்ப்படும் நிலையில் இச்சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவம் நடந்தபோது மனைவி வீட்டில் இருந்த, வெளியே சத்தம் கேட்டபின்தான் இந்த துயரச் சம்பவத்தை அறிந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
குடும்பத்தினரின் தகவலின்படி, COVID-19 தொற்றுக்குப் பிறகு ஒரு கண் பார்வையை இழந்ததும், மற்றொரு கண் பார்வை குறைந்ததன் காரணமாக அந்த நபர் மன அழுத்தத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த தற்கொலைக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



