புது டெல்லி, ஆகஸ்ட் 19 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்திய வருகையை வரவேற்கும் வகையில், அவர் புகைப்படத்துடன் பதாகைகள் புது டெல்லியின் சாலைகளை அலங்கரித்துள்ளன.
‘மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை வரவேற்கிறோம்’ என அவரின் முகம் பதித்து பதாகையில் எழுதப்பட்டிருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1957-இல் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடங்கி இன்று வலுவடைந்து வருகிறது.
இதனிடையே, கோலாலம்பூரின் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவிய முதல் ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.