Latestஇந்தியாஉலகம்

பூட்டப்பட்ட காரில் பல மணிநேரம் இருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மூச்சுத் திணறலால் இறந்தது.

பானாஜி ஏப்-10- இந்தியாவின் கோவா மாநில தலைநகரான பானாஜியிலுள்ள சூதாட்ட விடுதியில் பூட்டப்பட்ட காரில் விடப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்தது.

அந்த நாயின் உரிமையாளர் நான்கு மணி நேரத்திற்கும் மேல் பூட்டப்பட்ட காருக்குள் நாயை விட்டுவிட்டு சூதாட்ட விடுத்திக்கு சென்றுவிட்டு திரும்பியதால் காற்றோட்ட வசதியில்லாமல் விடப்பட்டிருந்த நாய் இறந்தது.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த நாய், இறுதியில் மூச்சுத்திணறி இறப்பதற்கு முன்பு, காரின் தரை விரிப்பைக் கடித்துத் துளைக்க முயன்றது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பூட்டப்பட்ட காருக்குள் விடப்பட்ட நாய் மூச்சுத் திணறலால் இறந்தது கோவாவில் இது ஐந்தாவது சம்பவமாக இருந்ததால் பிராணி வதை குற்றத்தின் கீழ் கார்நாடாகாவைச் சேர்ந்த நாயின் உரிமையாளருக்கு எதிராக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான பானாஜியில் உள்ள விலங்கியல் அமைப்பு போலீஸ் துறைக்கு கடிதம் எழுதி குற்றத்தை பதிவு செய்வதற்கும் , வானத்தின் உரிமையாளரை அடையாளம் காண சூதாட்ட விடுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைப் பெறவும் அதைப் பறிமுதல் செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!