பெங்களூரு, மே 13 – கடுமையான மழையைத் தொடர்ந்து பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு பல விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்திய நேரப்படி நேற்றிரவு மணி 11.18 முதல் 11. 54 வரை ஏழு உள்ளூர் விமானங்களும் நான்கு அனைத்துலக விமானங்களும் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பதாக பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடுமையான மழையுடன் மின்னலும் அதிகமாக இருந்ததால் பயணிகளின் பாதுகாப்பை கருதி விமானங்கள் பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் விமான நிலையத்தில் வெள்ள நீர் அதிகமாக இருந்ததால் விமானங்கள் தரையிறங்க முடிவில்லை.
டில்லி , மும்பை கோவா ஆகிவற்றிலிருந்து வந்த உள்நாட்டு சேவைக்கான ஏர் இந்திய விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்தில் இறங்க முடியாமல் சென்னை விமான நிலைத்திற்கு திருப்பி விடப்பட்டன. பேங்காக்கிலிருந்து வந்த Thai Airways, Thai Lion Air, Air France , Amsterdam மிலிருந்து வந்த KLM ஆகிய அனைத்துலக விமானங்களும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பெங்களூரில் முக்கிய நகர்களின் சாலைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.