Latestமலேசியா

பெசுட்டில் வளர்ப்பு பேத்தி கற்பழிப்பு; சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய ஆடவன் கைது

கோலாலம்பூர், ஜூலை 16 – பெசுட்டில் தனது வளர்ப்பு பேத்தியை கற்பழித்த சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய ஆடவனை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட அந்த 14வயது இளம் பெண் பெசுட் ( Besut) மருத்துவமனையில் மன உளைச்சலால் சிகிச்சை பெற்றபோது தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைக் குறித்து தெரிவித்ததாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரொசாக் ( Abdul Rozak Muhammad) தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நேற்று போலீசில் புகார் செய்தது. ஆகக்கடைசியாக தனது வளர்ப்பு தாத்தா 2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் தன்னை கற்பழித்தாக அந்த இளம் பெண் கூறியுள்ளார். அந்த கற்பழிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மனஉளைச்சலினால் அந்த பதின்ம வயது பெண் சொந்தமாக தனது உடலில் காயம் ஏற்படுத்திக் கொண்டதற்கான அடையாளம் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர் என அப்துல் ரொசாக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!