Latestமலேசியா

பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவீர் – சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 3 -நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் தனது பெட்ரோல் நிலையங்களிலும் Kedai Mesra எனப்படும் அதன் கடைகளிலும் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக்கொண்டிருக்கிறார். நாட்டில் வேலையில்லா விகிதத்தை குறைப்பதற்காக பெட்ரோனாஸ் இந்த நடடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தற்போது பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையங்களிலும் Kedai Mesra கடைகளிலும் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதற்கான அவசியம் இல்லை. குறைந்த சம்பளம் காரணத்திற்காக உள்நாட்டினர் வேலை செய்ய முன்வரமாட்டார்கள் என்ற நிலை இருந்தால் கூடுதல் சம்பளம் மற்றும் உள்நாட்டினருக்கு தேவையான தொழில் திறன் பயிற்சியையும் பெட்ரோனாஸ் வழங்க முன்வர வேண்டும்.

தனது 1,000த்திற்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்களிலும் Kedai Mesra-விலும் கூடுதலான விழுக்காடு உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பு வழக்குவதில் பெட்ரோனாஸ் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். நமது நாட்டின் பொருளாதார சுபிட்சம், மலேசியர்களின் வாங்கும் ஆற்றலை வலுப்படுத்துதல், ரிங்கிட் நாணயம் வெளிநாடுகளுக்கு வெளியேறுவதை குறைத்தல் போன்றவற்றை கருதி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதை பெரோனாஸ் சமூக கடப்பாடாக கொண்டு செயல் படவேண்டும்.

இதன்வழி நாட்டில் வேலையில்லா பிரச்சனையை தீர்ப்பதிலும் பெட்ரோனாஸ் முக்கிய பங்காற்ற முடியும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் குணராஜ் வலியுறுத்தினார். நாட்டின் முக்கிய பொருளாதார நிறுவனமாக திகழும் பெட்ரோனால் உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறந்த முன்னுதாரணமாக திகழ வேண்டும் என குணராஜ் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!