
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 8 – மிட் வேலி மெகாமாலிலுள்ள பெட்ஸ் வொண்டர்லேண்ட் (Pets Wonderland) விற்பனை நிலையத்தில் விலங்கு நல மீறல்கள் எதுவும் நடைபெறவில்லையென்று கால்நடை சேவை துறை (DVS) உறுதிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாயும் தனித்தனியாக உடல்நிலை மதிப்பீட்டு முறையால் பரிசோதிக்கப்பட்ட போது, அதில் எந்தவொரு நல மீறல்களும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நிலையத்தில் இரண்டு நாய்க்குட்டிகள் ஊட்டச்சத்து குறைவுடன் உள்ளன எனவும், அவைகள் சுகாதாரமற்ற மற்றும் மனச்சோர்வான சூழலில் இருக்கின்றன என்று நிலையிலுள்ளனவாகவும், சுருக்கமான வசிப்பிடங்களில் வைக்கப்பட்டுள்ளனவாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் ‘பெட்ஸ் வொண்டர்லேண்ட்’ , இந்த மாத இறுதிக்குள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பூனைகள் மற்றும் நாய்களின் விற்பனையை படிப்படியாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், தத்தெடுப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், தங்குமிடங்கள் மற்றும் மீட்பு அமைப்புகளுடன் கூட்டு பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் , உயர் தர செல்லப்பிராணி பொருட்கள் மற்றும் நிபுணர் ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.