Latestமலேசியா

பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம்

பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம்

பத்து பஹாட், பிப்ரவரி 12 –

மூன்று பெண்கள் முன்னிலையில் அநாகரீகமான ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபட்டதாக பிடிபட்ட 24 வயது மாணவனை விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கும்படி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377D இன் கீழ் அநாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டது தொடர்பான விசாரணைக்காக அந்த மாணவனை காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நுரஷிடா ரஹ்மான் உத்தரவுபிறப்பித்தார். ஜனவரி 26ஆம் தேதி காலை 8 மணியளவில் அந்த மாணவன் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 34 வயது இல்லத்தரசி, இரண்டு தோழிகளுடன் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ​​அருகிலுள்ள புதரில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. பின்னர் அப்பெண்கள் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு புதரில் நிர்வாணமான நிலையில் அந்த மாணவன் இருந்ததைக் கண்டு போலீசில் புகார் செய்தனர் . இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!