கோலாலம்பூர், ஜன 2 – விடுமுறையில் இருந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் பொழுது போக்கு விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். 26 வயதுடைய அந்த போலீஸ்காரர் அதிகாலை இரண்டு மணியளவில் மேற்கொள்ளப்பட் சோதனையின்போது வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்
புலனாய்வுத்துறையினரால் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற Op Hiburan நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
ஜோகூர் மாநில போலீஸ்துறையில் பணியாற்றிவந்த அந்த பெண் விடுமுறையில் இருந்துவந்ததாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Lazim கூறினார்.
Amphetamine மற்றும் methamphetamine போன்ற போதைப் பொருளை அந்த போலீஸ்காரர் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்ததோடு மேல் விசாரணைக்காக அவர் வங்சா மாஜூ போலீஸ் தலைமையகத்தில் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 15 (1) (a) விதியின் கீழ் அவர் மீது விசாரண நடத்தப்பட்டு வருவதாக முகமட் லாஸிம் தெரிவித்தார்.