பெந்தோங், ஆகஸ்ட் 29 – நோக்கமின்றி பெந்தோங்கில் கடை ஊழியரை, இருவர் தாக்கியதாக நம்பப்படும், காணொளிப் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
X தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டு நிமிடம், இரண்டு வினாடி காணொளியில், அந்த சம்பவம் இரவில் நடந்தேறியது என்பதை அறியமுடிகிறது.
அந்த கடையின் ஊழியரை அணுகிய இருவரும் வெள்ளை நிறத்தில் சட்டை அணிந்திருந்த நிலையில், ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.
இந்நிலையில், தலைக்கவசம் அணிந்த அந்த ஆடவர் கோபத்துடன் கடை ஊழியரை அடிக்கும் காட்சிகளைக் காணமுடிகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் இதுவரை கிடைக்கவில்லை என பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்ரிடெண்டன் சைஹாம் முகமட் கஹர் (Superintenden Zaiham Mohd Kahar) உறுதிப்படுத்தினார்.