பெந்தோங், ஜூலை-1 – பஹாங், பெந்தோங்கில் ஆடம்பர லம்போர்ஜினி (Lamborghini) கார் தடம்புரண்டு, தீப்பற்றிக் கொண்டதில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்.
ஜாலான் பெந்தோங் – காராக் சாலையின் 57.1-வது கிலோ மீட்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், முற்றாக எரிந்துப் போன காரில் இருந்து அவ்வாடவரின் உடல் மீட்கப்பட்டது.
உடனிருந்த பெண் பயணியை முன்னதாக அங்கிருந்த பொது மக்கள் காப்பாற்றினர்.
அவருக்குக் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த வேகத்தில் அந்த Lamborghini கார் தீப்பிடித்ததாக, தீயணைப்பு மீட்புத் துறையின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.