கோலாலம்பூர், மே 13 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்த பெர்சத்து கட்சியின் ஆறு உறுப்பினர்களின் நிலை குறித்து அக்கட்சியிடமிருந்து மக்களவை இதுவரை எந்தவொரு குறிப்பையும் பெறவில்லையென நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் Johari Abdul தெரிவித்திருக்கிறார். பெர்சத்து கட்சி தனது சட்டத்தில் திருத்தங்கள் செய்தபோதிலும் அவர்களது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து இதுவரை எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதால் இப்போதைக்கு அவர்களது நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அவர் கூறினார்.
நாடாளுமன்ற விவகாரத்தில் சம்பந்தப்படாதவரை அவர்களது நிலை குறித்து நான் பொருட்படுத்தப்போவதில்லையென . இது அவர்களது அரசியல் மற்றும் நிர்வாக விவகாரமாக இருக்கிறது. எனவே அவர்கள் இதனை சங்கங்களின் பதிவகத்துடன் தீர்க்க வேண்டும். அவர்கள் இது தொடர்பாக தகவல் தெரிவித்தவுடன் தேவையான நடவடிக்கையை தாம் எடுக்க முடியும் என Johari தெரிவித்தார். இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு அறிக்கை, கடிதம் அல்லது மின்னஞ்சலை பெறவில்லையென அவர் கூறினார்.